அந்த வெள்ளை ஜூலி நாய் குட்டி ரொம்ப அழகு। அதனால என்னாச்சுன்னா அதே ஏரியாவிலிருந்த டாமிக்கு மனசுக்குள்ள பட்டாம்பூச்சி பறக்க ஆரம்பிச்சிடுச்சு! டாமியும் சும்மா இல்லை! ரொம்ப ஆணழகன்னு சொல்ல முடியாதுன்னாலும் ஒரு மாதம் தெருவுல சுத்தாம இருந்தா அவனும் நல்ல அழகுன்னு ஒத்துக்கலாம்।


நம்ம ஜூலிய ஹீரோ ரூட்டு விட ஆரம்பிச்சிட்டாரு। ரொம்ப நாளா சைட்டு மட்டுமே அடிக்கிறாரு। ஜூலி வீடுன்னு ஆரம்பிச்சு அவ எங்க போனாலும் பின்னாடி சுத்த ஆரம்பிச்சிட்டாரு।


இந்த நாளத்தான் டாமி எதிர்பாத்திருக்காரு। அது ஜூலியோட பிறந்த நாள்। இன்னைக்கு தன்னோட காதல சொல்லனும்னு சீக்கிரமா குளிச்சு சொக்கா ட்ரெஸ் பண்ணி ரெடியாயிட்டாரு।


ஜூலிகிட்ட போயி கொஞ்ச நேரம் தனியா பேசனும்னு சொல்லி சாய்ந்தரம் பூங்காவுக்கு வர அனுமதி வாங்கியாச்சு!


ஜூலி தன்னோட பிறந்தநாள் கொண்டாட்டத்த முடிச்சிட்டு வர மணி ஆறு ஆயிடுச்சு. டாமி தன்னோட கோர்ட்-லிருந்து ஒரு ரோஜாப்பூவையும் வாழ்த்து அட்டையும் எடுத்து ஐ லவ் யூ-னு சொல்லியாச்சு।ஆனால் ஜூலி இத ஏத்துக்கல! ரெண்டு பேருக்குள்ள வாக்குவாதம் வந்திடிச்சு! டாமி தன்னோட நிறை குறைகளை சொல்லி முடிக்கிறதுக்குள்ள ஜூலி அழுக ஆரம்பிச்சிடுச்சு! ஒரே கூட்டமா கூடிருச்சு!இந்த நேரத்துல அந்த பக்கம் போன ஒருத்தர் கேட்டாரு। இங்க என்னப்பா பிரச்சனை? காதலா? வந்ததே பாருங்க டாமிக்கு கோபம்! ரொம்ப அழுதுகிட்டே டாமி சொல்லுச்சு,மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக்காதல் அல்ல!அல்ல!அல்ல!அதையும் தாண்டி புனிதமானது!புனிதமானது!புனிதமானது!

0 comments:

About this blog