17.05.2007 தேதியிட்ட இந்த வார குங்குமம் இதழில் சுஜாதாவின் பதில்கள் எனும் பகுதியில் சுஜாதவிடம் கேட்கப்பட்ட கேள்விகளையும் அதன் பதில்களை பற்றியும்   ஒரு சிறு விமர்சனமாக இந்த பதிவு.
 
பொதுவாக ஏதேனும் சொல்ல விரும்பும் செய்திகளை, எழுத்தாளர்கள் தெளிவாக சொல்லிவிட்டால் அவருக்கும் நல்லது, படிக்கும் வாசகர்களுக்கும் நல்லது. அப்படி இருந்தால்தான் அவரது கருத்துக்கள் மற்றவர்களள சென்றடையும். சுஜாதாவிடம் வருவோம்.
 
 
கேள்வி : ஆய்ந்து அறிந்து மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லக்கூடியவர்கள் பெரும்பாலும் நாத்திகர்களாக இருந்திருக்கிறார்கள். நீங்கள் எப்படி?
 
சுஜாதா : பெரும்பாலும் என்கிறீர்கள். நீங்கள் எத்தனை ஆழ்ந்து அறிந்தவர்களை படித்திருக்கிறீர்க்ள்? நான் படித்த ஆ.அறிந்தவர்கள் எல்லாம் கடவுளை நம்புகிறவர்கள். ஐன்ஸ்டீன் உட்பட,...
 
          சுஜாதா தன்னை மட்டுமே அறிவாளி என்றும் தான் மட்டுமே புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளவர் என்று நினைத்து கொள்வார் போல, அதனால்தான் எத்தனை பேரை படித்திருக்கிறீர்கள் என கேட்கிறார்.சுஜாதா படிக்கும் புத்தகங்கள் அனைத்தும் நாமம் இட்டவர்கள் பற்றிய புத்தகங்கள் போல.
 
         இந்த கேள்வியை கேட்ட வாசகரின் பேரிலும் ஒரு சிறு குற்றம் உள்ளது.அறிஞர்களை பற்றி கேட்டுவிட்டு தாங்கள் எப்படியென சுஜாதாவிடம் கேட்டுவிட்டார். அதனால் சுஜாதாவும் தத்துவங்களை உதிர்த்துவிட்டார் போலும்.
 
 
கேள்வி 2 : தான் செய்யும் எல்லா தவறுகளுக்கும் பின்னாளில் இறைவனிடத்தில் தண்டனை உண்டு என்று உணர்ந்தாலும் கூட, மனிதன் தொடர்ந்து தவறுகள் செய்கிறானே ஏன்?
 
சுஜாதா     :  இறைவன் மன்னிக்கும் குண்ம் உள்ளவன் . தண்டனையை ரத்து செய்துவிடுவான் என்ற நம்பிக்கையில்தான். 'தெரியேன் பாலகனாய் பல தீமைகல் செய்துவிட்டேன். அரியே வந்தடைந்தேன். அடியேனை ஆட்கொண்டு அருளே' என்று திருமங்கை ஆழ்வார் போல உருகி கேட்டால் மன்னித்து விடுவார் .
 
           சுஜாதா என்ன சொல்ல நினைத்தார் என்பதையே இங்கு சொல்லாமல் விட்டுவிட்டார். தெளிவாக சொல்லவில்லையென்றாலும் தவறுகள் செய்துவிட்டு மன்னிப்பு பெற்றுக்கொள்ளலாம் என சூசகமாக சொல்கிறார் போல தெரிகிறது.
 
 
கேள்வி 3 : சிலரை பாரம் சுமப்பவராக வைத்து, சிலரை  வசதியாக வைத்திருக்கும் கடவுள், கணக்கில் வீக் அல்லது பாரபட்சம்காட்டுகிறார். இதில் எது சரியான விடை?
 
சுஜாதா    : சரியான விடை கடவுள் உங்களை இந்த கேள்வி கேட்கவைக்கிறார் என்பதே! ஏற்றத்தாழ்வே இல்லாத உலகத்தை நினத்துப்பாருங்கள். எல்லாருக்கும் எல்லாமும் எப்போதும் கிடத்துவிடும் என்றால் சரியாக அடுத்த திங்கட்கிழமைக்குள் போரடித்துவிடாதா?
 
           இங்கு சுஜாதா மட்டுமில்லை பல எழுத்தாளர்கள் இது போல எழுதப்படித்திருக்கிறேன். வெற்றி என்னும் மலையில் இருந்து பார்த்தால் அதன் அருமையும் பெருமையும் தெரிவதில்லை. பள்ளத்தாக்கில் இருந்து பார்த்தால்தான் அதன் அருமை தெரியும் என்று எழுதுகிறார்கள்.
 
           அவர்கள் பள்ளத்தாக்கின் பயங்கரம் தெரியாமல் எழுதுபவர்கள்.இந்தக் கேள்விக்கான பதிலை சுஜாதா எழுதுமுன் தன்னை சுற்றி ஒருமுறை பார்த்திருந்தால் இப்படி எழுதியிருக்க மாட்டாரோ என்னமோ! அல்லது வண்ண மீன்களால் அழகூட்டப்பட்டும் குளிருட்டபாட்டும் உள்ள அறைக்குள் இருந்தால் இதுபோலதான் எண்ணம் தோன்றுமோ என்னவோ?
 
            இவர் இப்படி எழுதுவதன் மூலம் ஒரு பயனும் இல்லை. இதற்க்கு பதில் எதேனும் ஒரு நாவலை இந்த நேரத்தில் எழுதியிருந்தால் கதையுடன் கதையாக போயிருக்கும். இப்படி ஒரு பதிலை பத்திரிக்கை ஆசிரியர் தணிக்கைக்கு உட்படுத்த மாட்டாரா?
 
           இதற்கெல்லாம் அடிப்படை என்னவென்றால் கடவுள் பெயரை சொல்லி மக்களின் அடிப்படை உரிமைகளையும் உடமைகளையும் பறிக்கும் எண்ணம்தான். இதற்கு பெயர் தான் ஏதோ பழத்தில் ஊசி ஏற்றுவது என்பது போல!
 
           இதெல்லாம் உனக்கெதுக்கு என்று கேட்காதீர்கள். எட்டு ரூபாய் கொடுத்து ஏமாந்தவன் சொல்கிறேன்!
 
 
 
 
 

14 comments:

First lemt me make one thing clear, i'm not Sujatha Fan..

1)Not all the famous writers are atheists, Many sceintists also belive in God this is fact, He never mentioned he is Superior in that answer.When the person who is asking the question is not sure about whom he is telling , we will get this kind of Answers.

ok let me post the same Question to you in different manner

Why most of the People who understands everything, and clearly explains about each and everything to other people are THEIST.

2)Thavarukalukku mannippu undu, Thapukalukku mannipu illa endru thaan solgiraar.

3)Life will be really boring when things are same, those who are working hard wants a change in Life, they dont want to settle down as it. There should be some change in life otherwise it will be Bored,,Even millionaires will always worry about something.

உங்கள் ஆதங்கத்திலே மிக்க நியாயம் இருக்கிறது. அந்த பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அப்படித்தான் எழுதிக்கொண்டிருக்கிறது. அதை ஒரு பொருட்டாக நினைத்து ஏன் எட்டு ரூபாய் கொடுத்து சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்கிறீர்கள் நண்பா..?

நடக்கமுடியாமல் தள்ளாடும் அந்த கிழத்துக்கு அறிவு சிறுத்து ரொம்ப நாளாச்சு...

அதே போல் பொந்துமணி என்கிற ராமசுப்பு என்கிற ரமேஷும் தன்னுடைய கேவலமான கருத்துக்களை வாரமலர் மூலம் வெளியிட்டு வருகிறது...

சுஜாதா விஞ்ஞானத்தை பரப்புகிறேன் என்ற பெயரில் அஞ்சானத்தை பரப்பும் நவீன தத்துவவாதி. மொத்தத்தில் இவருக்கு சமூக சிந்தனையைவிட பணச் சிந்தனைதான் முக்கியமானது. இவரது தத்துவமெல்லாம் பணத்திற்காகத் தானேயொழிய சமூகத்திற்காக அல்ல. இதுபோன்ற தத்துவாதிகள்தான் சமூகத்தில் அபாயகரமானவர்கள். இவர்கள் தங்கள் மீதான ஈர்ப்பை எப்போதும் பற்றிக் கொண்டிருப்பர். நல்ல நேரத்தில் அவரை அம்பலப்படுத்தியுள்ளீர்கள். வாழ்த்துக்கள். அத்தோடு இத்தகையவர்கள் சமூக முன்னேற்றத்திற்கு எதிரானவர்கள். குறிப்பாக சோசலிச தத்துவத்திற்கு எதிரானவர்கள்.

//அவர்கள் பள்ளத்தாக்கின் பயங்கரம் தெரியாமல் எழுதுபவர்கள்//

ஏழ்மையும், வறுமையும் மட்டுந்தான் பள்ளத்தாக்கா?

பள்ளத்தாக்குகள் என்பதே நம் பார்வைகளில் மாறுபடலாமில்லையா. குளிரூட்டப்பட்ட அறையில் வெதும்பியபடி இருப்பவர்களும், தெரு ஓரத்தில் புழங்கிவிட்டு எந்தக் கவலையும் இல்லாமல் இருப்பவர்களும் என...

சுஜாதாவை குறை சொல்வது மிகவும் எளிமையாகிவிட்டது என்றே நினைக்கிறேன்.

சிந்தனைகளை தொடருங்கள்.

http://www.makkal.tv/pressrelease.htm

பார்க்க

IF YOU ARE A "CHRISTIAN". YOU WILL BE FORGIVEN.

WHAT JESUS SAID" COMMIT SINS - DON'T WORRY" AND COME TO ME. I WILL FORGIVE YOUR SINS.

ACCCORDING TO CHRISTIANS JESUS DIED FOR OUR SINS, SO COMMIT SINS ANS ASK MERCY. YOU WON'T BE FCUKED IN THE HELL.

அடிக்கடி இப்படி வாங்கிக் கட்டிக் கொள்வது 'வாத்தியாருக்கு' பழக்கம். ஆ.வி யில் கற்றதும் பெற்றதும் பகுதியில் 1425 ஆண்டுகளாக மெக்கா வில் ஊற்றுத் தண்ணியாக வரும் 'ஜம் ஜம்' எனும் புனித நீர் சுத்த ஹம்பக் எங்கோ கடல் தண்ணீரை சுத்திகரித்து குழாய் மூலமாக கிணற்றில் விட்டு கதை அளக்கிறார்கள் எனச் சொல்லப்போய் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார். சுஜாதாவின் தீவிர் வாசகர் ஒருவர் அவர் வீட்டிற்கு ஒரு கேலன் ஜம் ஜ்ம் தண்ணீரையும் அனுப்பி வைத்து விட்டார். கடைசியில் எழுதியது தவறு என மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். அது மட்டுமல்ல 'கோயில் ஒழுகு' கட்டுரையிலும் இஸ்லாமியர்களை குறித்து தவறாக எழுதி வாங்கிக் கட்டிக் கொண்டார்.

ஐயா ராசா... உங்களுக்கு சுஜhதா மேல ஏதோ வெறுப்பு.. அல்லது பிராமண சாதி மேல எதாவது வெறுப்பா இருக்கும்னு நினைக்கிறேன்.. உங்க எழுத்துல அது மட்டும் தான் தெரியுது.. அதுக்கு எதுக்கு இப்படி கெடந்து தவிச்சு ஏதேதோ எழுதனும்.. ஏதாவது படிக்கற மாதிரி உருப்படியா எழுதுங்க சாமி...

///ஐயா ராசா... உங்களுக்கு சுஜhதா மேல ஏதோ வெறுப்பு.. அல்லது பிராமண சாதி மேல எதாவது வெறுப்பா இருக்கும்னு நினைக்கிறேன்.. உங்க எழுத்துல அது மட்டும் தான் தெரியுது.. அதுக்கு எதுக்கு இப்படி கெடந்து தவிச்சு ஏதேதோ எழுதனும்.. ஏதாவது படிக்கற மாதிரி உருப்படியா எழுதுங்க சாமி... ////

அனானி ஐயா!

எனக்கு பிராமண சாதி மேல வெருப்புதான். ஆனால் சுஜாதா மேல இல்லை. இன்னும் சொல்லப்போனால் அவரது நவல்கள் எனக்கு பிடிக்கும்.

என் மனதில் தோன்றியதை பதிவு செய்தேன். அவ்வளவுதான்.

மத்தபடி உங்களோட எழுத்து நடைய பாத்தா பழக்கமான நபர் போல தெரியுது.

நன்றி!

சுஜாதா கூறியுள்ளது போல ஜன்ஸ்டீன் ஒன்றும் கடவுளை நம்புகிறவர் அல்ல...

http://skeptically.org/thinkersonreligion/id8.html

я думаю: неподражаемо. а82ч

Excuse, that I interrupt you, but I suggest to go another by.

சுஜாதாவுக்கு என்றில்லை எல்லோருக்கும் தங்களின் அடிப்படை நம்பிக்கைகளிலை வெளிபடுத்துவது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

நாத்திகவாதியான கமல் தன்னுடைய படங்களில் இதை மறைமுகமாக சொல்லுகிறார்.

ஆன்மீகவாதியான இந்திரா சௌந்திராஜன் நாவலில் கூறிகிறார்.

எல்லோரும் இப்படிதான் இருக்கின்றார்கள். சுஜாதாவை ரசிக்க அவர் பாப்பனர் என்பதை ஒதுக்கிவைக்க வேண்டும். இல்லையென்றால் சுஜாதா கசப்பார்.

About this blog