எனது கண்களை இருள் தழுவிய நேரம். இந்த மயக்க முதலில் வந்தது எப்பொழுது என்று இதுவரை எனக்கு தெரியவும் இல்லை, அந்த மயக்கம் என்னை முழுமமயாக விழுங்குவது எப்பொழுது என நான் அறிந்ததுமில்லை! ஆனாலும் சுய நினைவுகள் அற்ற அந்த நிமிடங்கள் எனது உள்மனதின் ஒரு மூலையில் சேமிப்பாகிக் கொண்டுதானிருக்கிறது.


கண்கள் கனத்து உலகம் இருண்ட அந்த நேரத்தில் இரவு நேர புது கதிரவன் போல எனக்கு மட்டும் எனக்கே எனக்கு மட்டும் ஒரு வெளிச்சம் ஜனிக்கிறது. சற்றும் எதிர்பாராத வெளிச்சம். கண்ணை கூசச்செய்யும் வெளிச்சம். சட்டென வெளிச்சத்தின் புது உருவமாக ஒரு பெண் எழுந்து வருகிறாள். இதுவரை அவளை பார்த்ததில்லை. அவளது அழகை சொல்ல முடியவில்லை.


அலங்கரிக்கப்பட்ட அவளது விழிகள் என்னை பார்த்ததும் சில துளிகளை சிந்துகிறது. மலையிலிருந்து இறங்கிவரும் தண்ணீரை போல ஜீவ ஊற்றிலிருந்து வரும் கண்ணீர் அவளது சிவந்த கன்னத்தை தாண்டி இதழருகில் வந்து மோட்சம் அடைகிறது. அவள் கண்ணீர் துளிகளை துடித்தெறிகிறாள்.


அவள் விடும் கண்ணீர் என்னை சார்ந்ததோ எனறு ஒரு நிமிட எண்ணம் எனக்குள் உதயமாகும் அந்த நொடிப்பொழுதில் அவள் 'ஆமாம்' என்பது போல தலையசைக்கிறாள். இவள் இவ்வுலக பெண்தானா என்பதை உறிதிபடுத்த மேலிருந்து கீழாக ஒருமுறை அவளை பார்க்கிறேன்!


அவள் மேனியை அழங்கரித்த கழுத்தாரம் மட்டுமே எனக்கு தெரிகிறது! அதன் ஜொலிப்புதான் இவ்வளவு வெளிச்சம் என்பதை புரிந்துகொள்கிறேன். ஒரு நொடிப்பொழுதில் அவள் அந்த ஆரத்தை கழட்டி கையில் கொடுக்கிறாள்! அத்துடன் இல்லாமல் அவளது கண்கள் கோபக்கனலுடன் கண்ணீர் கொட்டுகிறது.


நான் வாங்க மறுக்கிறேன். கடைசிவரை வாங்க மறுத்துவிட்டேன். ஒரு நிமிட நேரத்தில் நடந்த அத்தனையும் கண்ணை விட்டு மறைந்துவிட்டன.


வழக்கம்போல விடியற்காலையில் அன்னை தேநீர் தம்ளருடன் என்னை எழுப்புகிறாள். வழக்கமாக அன்னையும் முகம் காணும் நான் கழுத்தை உற்று பார்க்கிறேன்! கனவுலகில் கண்ட ஆரம் அம்மாவின் கழுத்தில். புத்துணர்ச்சியுடன் அம்மா!


வேளியே சன்னலோரம் கனவில் கண்ட அந்த பேரொளியும் அந்த பெண்ணும் மறைந்த்துகொண்டிருந்தனர்.0 comments:

About this blog