மக்கள் கிறுக்குத்தனமான சினிமா பார்த்து ஏமாறுகிறார்கள் என தனது எண்ணங்களை எல்லாம் கொட்டியிருந்தார் செல்லா அவர்கள்.
அவரது பதிவை படித்தவுடன் எனது நண்பர் ராஜா சொன்ன கதை நினைவுக்கு வந்தது. ' ஐந்து நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவன் மட்டும் பேசாமல் இருக்கிறான். மற்ற நால்வரும் பின்வருமாறு பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
'மாப்ள, தமிழ்நாட்டோட அடுத்த முதல்வர் யாருடா?
'இதுல என்னடா சந்தேகம்? அடுத்து கண்டிப்பா விஜயகாந்த் தாண்டா! அவரோட படங்கள் எல்லாமே அந்த மாதிரி தாண்டா இருந்தது' என்கிறான் ஒருவன்.
'நம்ம தலைவர் மட்டும் கொஞ்சம் தலைய அசைச்சார்னா அவர முதல்வர் ஆக்கிரலாம்' என்றான் ஒருவன். இன்னொருவனும் இதை ஆதரித்தான்.
பின்னர் இவர்களின் பேச்சு மெல்ல கிரிக்கெட் பக்கம் வருகிறது.
'என்ன மச்சான். நம்மாளுங்க வங்காள தேசத்துகூட தோத்துட்டானுங்க!' எனறான் ஒருவன்.
'ஆமாண்டா, இலங்கை கூடையும் கேவலாமா தோத்துட்டாங்க!' என்றான் ஒருவன்.
'மச்சான் இதுக்கெல்லாம் ஒரே வழி என்னன்னா, அந்த இந்தி படம் லக்கான்-ல இருந்தான்ல நாயகன். அவன கிரிக்கெட் அணில சேக்கனும்,' என்று இவ்வளவு நேரம் அமைதியாக இருந்தவன் சொன்னான்,
மற்ற நால்வரும் சிரித்துக்கொண்டே, ' உனக்கென்ன பைத்தியமா? அது சினிமா, இது நிஜ கிரிக்கெட்' என்றனர்.
இதையே சற்று மாற்றி,' உங்களுக்கு பைத்தியம் இல்லையா? சினிமாவுக்கும் அரசியலுக்கும் தொடர்பு செய்து பார்கிறீர்களே' என்றான்.
இது ஒரு நல்ல கதை.
:))

1 comments:
Good Story!!!!!! Thanks
Post a Comment